தேசிய செய்திகள்

முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும்: அமித்ஷா + "||" + BJP Will Be Back With A Win Bigger Than 2014, Says Amit Shah At Key Meet

முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும்: அமித்ஷா

முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும்: அமித்ஷா
2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை விட அதிக இடங்களில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நுற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

விரைவில் நடைபெற உள்ள நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து இந்த கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்" என்றார். 

பாரதீய ஜனதா கட்சியின் உட்கட்சி தேர்தலை தள்ளிவைக்கவும், வரும் பாராளுமன்ற தேர்தலை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா தலைமையிலேயே எதிர்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

ஆசிரியரின் தேர்வுகள்...