தேசிய செய்திகள்

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை + "||" + Nepal gets access to all Chinese ports, ending dependence on India for trade

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை
இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேபாளத்துக்கு சீனா புதிய சலுகை வழங்கியுள்ளது.
காத்மாண்டு, 

இந்தியாவின் மிக அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம், இமைய மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளம், இதுவரை எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது. வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தி வந்தது. 

இந்த நிலையில், கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அத்தியாவசியப்பொருட்களுக்கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடரந்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை நாட நேபாளம் துவங்கியது. அதுமுதல், இருநாடுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் காட்ட துவங்கின. தொடர்ந்து வர்த்தக ரீதியிலான உறவையும் விரிவுபடுத்த முடிவு செய்தன. 

இது குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே சரக்கு  மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்று முடிவானது. அதன்படி, சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின்  ஷெங்ஷென்,சியான், புங்காங், மற்றும் ஷான்ஷியாங் ஆகிய 4 துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ள நேபாளத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேபாளம் தன்னிடம் உள்ள லாக்‌ஷூ, லாசா மற்றும் ஸசிகாட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை பயன்படுத்திக்கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவுடன் நடமுறைக்கு வருகிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இதன்மூலம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தற்போதைய நடவடிக்கையால் நேபாளத்தில் இந்தியாவின் தனிப்பட்ட ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 



தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
சர்வதேச எல்லையில் இந்திய ராணுவ வீரரை கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2. இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பு ஐ.நா. குழு அறிக்கையில் தகவல்
இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழக்கின்றன என ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. “2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்பு” -மத்திய அமைச்சர் டுவிட்
“2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்புள்ளது” என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
4. ‘மங்குட்’ புயல், சீனாவுக்கு விரைந்தது
பிலிப்பைன்சை உருக்குலைய வைத்து விட்டு, இந்தப் புயல் சீனாவை நோக்கி நேற்று விரைந்தது.
5. என்.எஸ்.ஜியில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி உள்ளது : அமெரிக்கா
என்.எஸ்.ஜியில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.