உலக செய்திகள்

எகிப்தில் 2013-ல் நடைபெற்ற போராட்டத்தில் தொடர்புடைய 75 பேருக்கு மரண தண்டனை + "||" + Egypt: Court sentences 75 people to death in connection with 2013 protests

எகிப்தில் 2013-ல் நடைபெற்ற போராட்டத்தில் தொடர்புடைய 75 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் 2013-ல் நடைபெற்ற  போராட்டத்தில் தொடர்புடைய 75 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தொடர்புடைய 75 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெய்ரோ,

எகிப்தில் ஏறத்தாழ  30 ஆண்டு காலம் அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி 2011-ம் ஆண்டு வீழ்ந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்ஸி எகிப்து அதிபரானார். எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார். 

எனினும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இதனால் அவரது ஆட்சி ராணுவத்தால் அகற்றப்பட்டது. இதையடுத்து மோர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் தெற்கு எகிப்தில் கடந்த 2013-ம் ஆண்டு நிகழ்ந்தது. பதவி நீக்கப்பட்ட மோர்ஸியை மீண்டும் அதிபராக்க வேண்டுமென்று வலியுறுத்தி இந்த வன்முறை நிகழ்ந்தது. இதுதொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த வன்முறை வழக்கில் பலருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கிலும்  75 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை  நீதிமன்றம்  உறுதி செய்துள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

1. சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
2. மோர்சி ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் வன்முறை : எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை
எகிப்து நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமைக்குரியவர் மோர்சி.
3. 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு
40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. #CapitalPunishment
4. மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டம் பெண்களின் பாதுகாப்பிற்கு பயனளிக்கும் - பிரதமர் மோடி
மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டம் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பயனளிக்கும் என பிரதமர் மோடி பேசிஉள்ளார்.
5. சிறார்கள் பலாத்காரம்: மரண தண்டனைக்கு எதிர்ப்பு, நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தல்
12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை என்ற சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. #DeathPenalty