கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/6 + "||" + 5th Test against England: Indian team at the end of the 174/6

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/6

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/6
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. #INDVsENG
லண்டன்,

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் குக் 71 ரன்களும், மோயின் அலி 50 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.


இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய அணி, விரைவில் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியில் பட்லர், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சோதனை கொடுத்தார். ரஷித் 15 ரன்களில் ஆட்டமிழந்த போதும், பட்லர் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து பிராடின் 38 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிலைத்து நின்று ஆடிய பட்லர் 89 ரன்களில்  ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 122 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார். ராகுலும், புஜாராவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதில் லோகேஷ் ராகுல் 37 ரன்களிலும், புஜாரா 37 ரன்களிலும், ரகானே (0) ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

பின்னர் கேப்டன் கோலியுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரளவு ரன் சேர்த்த நிலையில் கோலி 49 ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார்.  அவரைத் தொடர்ந்து ரிஷாப் பாந்த் 5 ரன்னில் வெளியேறினார். முடிவில் விஹாரி 25 ரன்களும், ஜடேஜா 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 51 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பிராட் மற்றும் குர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி 158 ரன்கள் பின் தங்கியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா : பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். இதனால் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.
2. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? - 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்குகிறது.
3. இங்கிலாந்து: விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு சிறை
இங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
4. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி படுதோல்வி ஏமாற்றத்துடன் விடைபெற்றார், ஹெராத்
காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.