தேசிய செய்திகள்

அக்டோபர்-31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி + "||" + PM Modi to Unveil World’s Tallest Sardar Patel Statue on 31 Oct

அக்டோபர்-31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அக்டோபர்-31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
அக்டோபர் 31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கலந்துகொள்ள குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி டெல்லிக்கு வந்தார்.

அப்போது விஜய் ரூபானி செய்தியார்களிடம் கூறியதாவது:

நாட்டின் ஒற்றுமையை குறிப்பிடும் சின்னமாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை அமைப்பதற்காக இரும்பு, மண், மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி சிலையை குஜராத்தில்  பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் படேல் சிலை அமைக்கப்படுகிறது. அந்த சிலை “Statue of Unity” என்று குஜராத் அரசால் அழைக்கப்படுகிறது”.  கடந்த 2013 ஆம் ஆண்டு, குஜராத் மாநில முதல்வராக இருந்த பிரதமர் மோடி, இந்த சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.