உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து தாக்குதல் - போலீசார், பாதுகாப்பு படையினர் 19 பேர் பலி + "||" + Afghanistan: Successive attack - police and security forces killed 19

ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து தாக்குதல் - போலீசார், பாதுகாப்பு படையினர் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து தாக்குதல் - போலீசார், பாதுகாப்பு படையினர் 19 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதலில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் 19 பேர் பலியாயினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் தீவிரமாக இருந்தவர் ராணுவ தளபதி அகமது ஷா மசூத். அவர் 2001–ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அவருடைய நினைவுநாளையொட்டி ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.


இதனை சீர்குலைக்கும் வகையில் காபூலில் நேற்று இரவு போலீசார் மீது கிளர்ச்சியாளர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 போலீசார் இறந்தனர். இதையடுத்து கிளர்ச்சியாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் வான் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10–க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோல் ஹெராத் மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனைச்சாவடி மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 வீரர்கள் பலியாகினர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததில் 10 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

காபூலில் இன்று தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் இறந்தார். 10–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு இடத்தில் தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் குண்டு வீச்சு: 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வீச்சில், 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியாயினர்.
2. ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், பலி எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் உள்ளூர் தளபதி உள்பட 8 பயங்கரவாதிகள் சாவு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பாடில்லை. மாஸ்கோவில் சமரச பேச்சு வார்த்தை முடிந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
4. மரியாதை தராததால் ஆத்திரம்: பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் ஆந்திர மாணவர்கள் 4 பேர் கைது
சீனியருக்கு மரியாதை தரவில்லை என கூறி ஜூனியர் மாணவரை பெல்டால் தாக்கிய 4 ஆந்திர மாநில மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
5. போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி: ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
கலபுரகியில் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியை நேற்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.