தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியல் + "||" + #BharathBandh: CPI(M) holds protest in #AndhraPradesh's Visakhapatnam against fuel price hike

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக எதிர்க்கட்சிகள் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சிபிஐ (எம்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை, டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 85.58 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் விலை இன்றும் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
3. மராட்டியத்தில் மது விலை உயர்கிறது
மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மது விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
4. பெட்ரோல்-டீசல் விலை தலா 10 காசு உயர்வு பெட்ரோல்- ரூ.89.44; டீசல்- ரூ.78.51
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றும் தலா 10 காசுகள் உயர்ந்தது.
5. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 அதிகரிப்பு பயணிகள் அதிர்ச்சி
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.