தேசிய செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் - ராஜபக்சே + "||" + It is up to the Indian govt to decide on it Rajiv Gandhi assassination case Mahinda Rajapaksa

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் - ராஜபக்சே

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை:   இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் - ராஜபக்சே
ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்' என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். #MahindaRajapaksa
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தநிலையில்,  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார்.  இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் அவர்களை தண்டித்தோம்.  'ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்' எனக் கூறினார். 

விராட் இந்துஸ்தான் சங்க நிகழ்ச்சியில், இந்தியா - இலங்கை உறவு குறித்து பேசவுள்ள ராஜபக்சே, பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...