மாநில செய்திகள்

பாரத் பந்த்: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் - பொன்.ராதாகிருஷ்ணன் + "||" + People have boycotted the struggle - PonRadhakrishnan

பாரத் பந்த்: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் - பொன்.ராதாகிருஷ்ணன்

பாரத் பந்த்:  தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #PonRadhakrishnan
சென்னை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த கண்டன கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார். சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இந்தநிலையில் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர்.  இதன் மூலம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு என்ன என்பது தெரிந்துவிட்டது.  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் வேலை இல்லை. அனைத்து மாநில அமைச்சர்கள் கொண்ட ஜிஎஸ்டி குழுதான் முடிவெடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மகாராஷ்டிராவில் பாரத் பந்த்: ரெயில் போக்குவரத்து பாதிப்பு, 14 பேருந்துகள் சேதம்; 100 பேர் கைது
மகாராஷ்டிராவில் நடந்த பாரத் பந்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 14 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
2. வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி பாரத் பந்த்; பாரதீய ஜனதா
காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டம் ஆனது பொதுமக்களிடையே வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி என பாரதீய ஜனதா கூறியுள்ளது.
3. எஸ்.சி/எஸ்.டி சட்ட விவகாரம்: நாடுதழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு
எஸ்.சி/எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.