தேசிய செய்திகள்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ராஜஸ்தான் பயணம் + "||" + Amit Shah to visit Jaipur on Tuesday

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ராஜஸ்தான் பயணம்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ராஜஸ்தான் பயணம்
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராஜஸ்தானுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.
புதுடெல்லி,

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று ராஜஸ்தான் செல்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டம் பற்றி மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அருண் சதுர்வேதி கூறுகையில், “ ஜெய்ப்பூருக்கு இன்று காலை வரும் அமித் ஷா, முதலில் மோதி துங்காரி விநாயகர் கோயிலில் வழிபாடு செய்கிறார். 

அதன் பிறகு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளனம், சக்தி கேந்திர சம்மேளனம், அறிவுஜீவிகள் சம்மேளன கூட்டங்களில் பங்கேற்கிறார். அதன் பிறகு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரணி ஒன்றில் உரையாற்றுகிறார் என்று அருண் சதுர்வேதி கூறினார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமித்ஷாவின் ராஜஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.