மாநில செய்திகள்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் + "||" + CBI summons police dsp mannar mannar on the gudkha case

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன்
குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை, 

குட்கா ஊழல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு இடங்களில் 5-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஆலை உரிமையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

அப்போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை சி.பி.ஐ. காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.இந்த நிலையில், குட்கா ஊழல் வழக்கில் டி.எஸ்.பி. மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஊழல் தொடர்பாக இருவர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் சமயத்தில், செங்குன்றம் சரக உதவி ஆணையராக மன்னர்மன்னர் பதவி வகித்தார். செங்குன்றம் காவல் ஆய்வாளராக சம்பத் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை இன்றும் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
2. சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடக்கம் - மாவட்ட சிறு, குறுதொழிற்சாலைகள் சங்க தலைவர் தகவல்
அடுத்த மாதம் 28-ந் தேதி முதல் சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடங்கப்படும் என மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.
3. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாடட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது.
4. குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது: முதலமைச்சர் பழனிசாமி
குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் தெரிவித்தார்.
5. சூடு பிடிக்கும் குட்கா ஊழல்: சட்டவிரோத பணப்பரிமாற்றம் அமலாக்கத்துறை விசாரணை
சூடு பிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு ரூ.60 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. #GutkhaScam #George #CBI