தேசிய செய்திகள்

என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை : முகுல் சோக்‌ஷி வீடியோ வாயிலாக அறிக்கை + "||" + Mehul Choksi's First Defence On Video: "Allegations False And Baseless"

என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை : முகுல் சோக்‌ஷி வீடியோ வாயிலாக அறிக்கை

என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை : முகுல் சோக்‌ஷி வீடியோ வாயிலாக அறிக்கை
என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை என முகுல் சோக்‌ஷி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்கில் நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்சி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இவர்கள் இருவரும் ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர். நிரவ் மோடி, அவரது சகோதரர் நீஷல், அவரது சகோதரி பூர்வி மோடி, அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் சுபாஷ் பரப் மற்றும் மிஹிர் பன்சாலி ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் சோக்சிக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் அமலாக்க துறை குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது.  அதன்பின்னர் கடந்த ஜூனில், சோக்சிக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கும்படி இன்டர்போலுக்கு அமலாக்க துறை வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த பின்னர் முதல் முறையாக வீடியோ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முகுல் சோக்‌ஷி, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார். மேலும், எந்த அடிப்படைக்காரணமும் இன்றி எனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது” எனவும் முகுல் சோக்‌ஷி தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2. புரோ கபடி: மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றன.
3. 13 பேரை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலி சுட்டுக்கொலை
மராட்டியத்தில் 13 பேரை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை பந்தாடியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அபார வெற்றிபெற்றது.
5. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.