மாநில செய்திகள்

மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை + "||" + Cut trees For 8th way Plans Prohibition will be imposed Chennai HC warns

மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்து உள்ளது.




சென்னை

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.109 மரங்களை வெட்டியதற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தனர்

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது - தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அரசு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி ஐகோர்ட்  நீதிபதிகள் கேள்வி விடுத்தனர்

சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்வதாக ஐகோர்ட்டில்  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எச்.ராஜா நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
2. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே - சென்னை ஐகோர்ட்
மெரினா கடற்கரையில் எந்த விதப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது என தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
3. இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
4. மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. #RIPKalaignar #RIPKarunanidhi
5. 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம்
2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.