தேசிய செய்திகள்

ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது + "||" + Rs. 8 lakh bribe was heard GST Superintendent arrested

ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது

ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது
ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

அரியானா மாநிலம் ரோதக்கில் மத்திய ஜி.எஸ்.டி. கமி‌ஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் சுதேஷ் குமார். இவர், அந்த பகுதியில் ஒரு நிறுவனம் செய்த அரிசி விற்பனை மீது மத்திய ஜி.எஸ்.டி. (சரக்கு–சேவை வரி) விதிக்காமல் இருப்பதற்காக, ரூ.10 லட்சம் லஞ்சமாக தருமாறு கேட்டார். அந்த நிறுவன அதிபர், சூப்பிரண்டு சுதேஷ் குமாரை தனியாக சந்தித்து பேசினார். அப்போது, லஞ்ச தொகையை ரூ.8 லட்சமாக சுதேஷ் குமார் குறைத்துக்கொண்டார்.


நிறுவன அதிபர், ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட சுதேஷ் குமார், மீதி ரூ.7 லட்சத்தை விரைவில் தருமாறு கூறினார். இதுபற்றி அந்த நிறுவன அதிபர், சி.பி.ஐ.யில் புகார் செய்தார்.

அதன்பேரில், சுதேஷ் குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி உள்ளிட்ட இடங்களில் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கமும், வணிக, குடியிருப்பு சொத்துகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சுதேஷ் குமார், அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் பறிமுதல்
விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.8 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. பரங்கிப்பேட்டையில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பரங்கிப்பேட்டையில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
3. விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு, மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டு சிறை
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
4. மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5. ரூ.800 லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஊழியருக்கு 2 ஆண்டு ஜெயில்
ரூ.800 லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஊழியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.