தேசிய செய்திகள்

துர்கா பூஜைக்காக பாடல் எழுதிய மம்தா பானர்ஜி + "||" + Mamta Banerjee wrote the song for Durga Puja

துர்கா பூஜைக்காக பாடல் எழுதிய மம்தா பானர்ஜி

துர்கா பூஜைக்காக பாடல் எழுதிய மம்தா பானர்ஜி
துர்கா பூஜைக்காக பாடல் ஒன்றை மேற்கு வங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ளார்.
கொல்கத்தா,

துர்கா பூஜை நாட்டின் இதர பகுதிகளை விட கொல்கத்தா நகரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அடுத்த மாதம்(அக்டோபர்) 18–ந் தேதி கொண்டாடப்படும் இந்த பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி பக்தி பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த தகவலை துர்கா பூஜை விழா குழு கூட்டம் ஒன்றில் அவரே தெரிவித்தார்.


இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மந்திரி அரூப் பிஸ்வாஸ் என்னிடம் துர்கா பூஜை நிகழ்ச்சிக்காக ஒரு பக்திப் பாடல் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று துர்கா பூஜையை சிறப்பிக்கும் விதமாக பாடலை எழுதி இருக்கிறேன். இதை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

மம்தா பானர்ஜி எழுதிய பாடலை பிரபல பாடகரும், மாநில கலாசார மந்திரியுமான இந்திராணில் சென் பாடி இருக்கிறார்.

கடந்த ஆண்டும் துர்கா பூஜைக்காக மம்தா பானர்ஜி இதேபோல் ஒரு பாடலை எழுதியதும், அதை பிரபல பாடகி ஸ்ரேயா கோஷால் பாடியதும் நினைவு கூரத்தக்கது.