உலக செய்திகள்

லிபிய கடல் பகுதியில் படகு விபத்தில் 100 பேர் பலி + "||" + 100 people killed in boat accident in Libya

லிபிய கடல் பகுதியில் படகு விபத்தில் 100 பேர் பலி

லிபிய கடல் பகுதியில் படகு விபத்தில் 100 பேர் பலி
லிபிய கடல் பகுதியில் படகு விபத்தில் 100 பேர் பலியாயினர்.
கெய்ரோ,

லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன.


அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதிகள் பரிதாபமாக பலி ஆகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.