தேசிய செய்திகள்

டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொலை + "||" + Delhi police head constable shot dead by unidentified miscreants in Jaitpur area

டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொலை

டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொலை
டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக சுட்டனர். 

இதில் நிலைகுலைந்த காவலர் ரம் அவ்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கான நோக்கம் இன்னும் புலப்படவில்லை. தலைமைக்காவலரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியியில், காவலர் ஒருவரே  சுட்டுக் கொல்லப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் விமானத்தை இயக்க போதையில் வந்த விமானி - பரிசோதனையில் சிக்கினார்
டெல்லியில் விமானத்தை இயக்க வந்த விமானி, பரிசோதனையின் போது போதையில் இருந்ததாக சிக்கினார்.
2. டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை - சந்திரபாபு நாயுடு தகவல்
பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார்.
3. டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்
டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
4. டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை
டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.
5. கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை
காற்று மாசு அதிகரித்து காணப்படும் நிலையில் கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது