தேசிய செய்திகள்

நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் + "||" + Sushma Swaraj condoles Kulsoom Nawaz's demise

நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல்

நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல்
நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

 நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:, நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் குல்சூம் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. பிராந்திய ஒத்துழைப்புக்கு இடையூறுகளை இந்தியா ஏற்படுத்துகிறது: பாக். குற்றச்சாட்டு
பிராந்திய ஒத்துழைப்புக்கு இடையூறுகளை இந்தியா ஏற்படுத்துகிறது என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.
2. ஆண்டிகுவா வெளியுறத்துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : மெகுல் சோக்சியை நாடுகடத்த உதவுமாறு வேண்டுகோள்
வங்கிக் கடன் மோசடி வழக்கில் மெகுல் சோக்சியை நாடுகடத்தத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா அரசு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. நெல்சன் மண்டேலாவை எங்கள் சொந்தமாக கருதுகிறோம் அவர் பாரத் ரத்னா என்றழைக்கப்படும் பெருமைக்குரியவர்-சுஷ்மா சுவராஜ்
நெல்சன் மண்டேலாவை எங்கள் சொந்தமாக கருதுகிறோம் அவர் பாரத் ரத்னா என்றழைக்கப்படும் பெருமைக்குரியவர் என சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார். #BharatRatna #SushmaSwaraj #NelsonMadibaMandela
4. ஐ.நா. சபையின் 73-வது பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் சுஷ்மா சுவராஜ்
ஐநா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அமெரிக்கா சென்றடைந்தார்.
5. 3 மத்திய ஆசிய நாடுகளில் சுஷ்மா சுவராஜ் இன்று முதல் பயணம்
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 3 மத்திய ஆசிய நாடுகளில் இன்று (ஆக.2) முதல் சுற்றுப்பயணம் செய்கிறார்.