தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மூன்று முறை அத்துமீறியதாக தகவல் + "||" + China's PLA transgressed into Indian territory thrice in August: Sources

ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மூன்று முறை அத்துமீறியதாக தகவல்

ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மூன்று முறை அத்துமீறியதாக தகவல்
ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மூன்று முறை அத்துமீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வருவதோடு, அவ்வப்போது அங்குள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மூன்று முறை சீன துருப்புகள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பரஹோட்டி என்ற கிராமத்திற்குள் சுமார் நான்கு கி.மீட்டர் தொலைவுக்கு அத்துமீறி நுழைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில், சீன ராணுவத்தின் அத்துமீறல் குறித்து கருத்து தெரிவித்த வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங், உண்மையான எல்லைக்கட்டுபாட்டு பகுதியை அறிவதில் இரு தரப்புக்கும் இடையே வேறுபட்ட கண்ணோட்டம் இருப்பதாகவும், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த விவகாரத்தில் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 4,057 கி.மீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டுள்ளது.
2. ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 162 ரன்களில் சுருண்டது
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 162 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. #INDvsPAK #AsiaCup2018
3. இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இடைத்தரகர் மாயம் - வழக்கறிஞர்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இடைத்தரகரை காணவில்லை என வழக்கறிஞர் கூறியுள்ளார்.
4. டோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்! சமூக வலைதளத்தில் வைரலாகிறது
டோனி அவுட் ஆனதை அதிர்ச்சி அடைந்த இளம் ரசிகர், மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
5. ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.