மாநில செய்திகள்

முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு + "||" + Regarding the complaint of the Chief Minister Detailed Report on 17th Court order

முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான அறிக்கை தர  ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நிலுவையில் உள்ள இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி, ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது புகார் மீது கடந்த 22.6.2018 அன்றே முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, வரைவு அறிக்கை கடந்த 28.8.2018 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஊழல் கண்காணிப்புத்துறை செயல்படுகிறது.

எனவே, முதல்-அமைச்சருக்கு எதிரான புகார் தொடர்பாக அவரது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்காது.

எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரை எந்தவித குறுக்கீடும் இல்லாமல் செயல்படும் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 17ம் தேதி விரிவான விசாரணை அறிக்கை தர வேண்டும் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. #ChennaiHighCourt
2. கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம்
கோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை என்றும் இயந்திர தன்மையுடன் பணியாற்றுவதாகவும் சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
3. முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் தினசரி விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் தினசரி விசாரணை அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
4. முதல்வர் பழனிசாமி மீதான புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தொடர்பாக பதில் அளிக்க செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. #EdappadiPalaniswami
5. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.