தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய போலி டாக்டர் சிக்கினார் + "||" + Worked in government hospitals The fake doctor was trapped

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய போலி டாக்டர் சிக்கினார்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய போலி டாக்டர் சிக்கினார்
கர்நாடக மாநிலத்தில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய போலி டாக்டர் சிக்கியுள்ளார்.
பெங்களூர்

கர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.

 மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.