தேசிய செய்திகள்

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் லண்டன் கோர்ட்டு டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது + "||" + Vijay Mallya s Extradition Case Verdict On December 10 British Court

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் லண்டன் கோர்ட்டு டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் லண்டன் கோர்ட்டு டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது
விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் லண்டன் கோர்ட்டு டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பை வழங்குகிறது. #VijayMallya

லண்டன்,


இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி லண்டன் பெருநகர கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்திய அதிகாரிகள் தரப்பிலும், மல்லையா தரப்பிலும் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், வழக்கு விசாரணையின் போதும், அவரை இந்திய நீதிமன்றங்கள் தண்டித்தாலும் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் அவரை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரை அடைக்கும் சிறையின் வீடியோவை தாக்கல் செய்யவும் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது, இந்திய அரசின் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கின் இறுதிவாதம் இன்று நடைபெற்றது. விசாரணையின் போது “கிங்பிஷ்ருக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஐடிபிஐ அதிகாரிகள் நன்கு அறிவார்கள். ஐடிபிஐ அதிகாரிகளின் மின்னஞ்சல்களை வைத்து பார்க்கும் போது நஷ்டங்களை மல்லியா மறைத்தார் என்ற அரசுதரப்பு குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. ஏமாற்றுவதற்காக மல்லையா வங்கிக் கடன் கோரியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்று தெரிவிக்கப்பட்டது.  

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கடன் பெறுவதற்காக மல்லையாவும், ஐடிபிஐ வங்கியின் துணை மேலாண் இயக்குநர் பி.கே.பத்ராவும் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டதாக சில ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்தது. அந்த ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளன என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் டிசம்பர் 10-ம் தேதி கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது. 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி எம்மா அர்பத்நாத் கூறியுள்ளார். 
 
 வழக்கில் இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டால் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் இரண்டு மாதங்களில் கையெழுத்திடுவார். தீர்ப்புக்கு எதிராக அமைந்தால் இந்திய அரசு, மல்லையா ஆகிய இரு தரப்பினரும் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.  


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு
விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் என்று மாயாவதி குற்றம்சாட்டினார்.
3. லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து மல்லையாவை தப்ப விட்டார் சி.பி.ஐ. இயக்குனர்; ராகுல் குற்றச்சாட்டு
விஜய் மல்லையாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. இயக்குனர் ஏ.கே. சர்மா பலவீனம் அடைய செய்து அவரை தப்பி செல்ல வைத்து விட்டார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
4. விஜய் மல்லையா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றது தொடர்பாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விவகாரம், சிபிஐக்கு காங்கிரஸ் கேள்வி
விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்ததில்லை என்று சிபிஐ இப்போது எப்படி கூறலாம் என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.