தேசிய செய்திகள்

அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி + "||" + I met Jaitley in Parliament and told him I was going to London says Mallya

அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி

அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி
அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் என விஜய் மல்லையா கூறியுள்ளார்.

லண்டன், 


வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையா நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன் என்று லண்டனில் கூறியது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  விஜய் மல்லையா நிதியமைச்சரை சந்தித்தேன் என்று பேட்டியளித்ததும் இவ்விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ், சந்திப்பில் யார் இருந்தது என்பதை விளக்குமாறு மத்திய அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய் மல்லையாவிடம் இருந்து இதுபோன்ற பேட்டி வெளியாகியதும் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெட்லியின் விளக்கத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, ஜெட்லியிடம் பாராளுமன்றத்தில்தான் பேசினேன். அதிகாரப்பூர்வமான சந்திப்பு கிடையாது. யாரும் என்னை காப்பாற்றவில்லை, நான் ஓடவேண்டிய அவசியம் கிடையாது, என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மீடியாக்கள் உருவாக்கியதுதான். லண்டன் செல்லப்போகிறேன் என அருண் ஜெட்லியிடம் கூறினேன் எனவும் குறிப்பிட்டார். 



தொடர்புடைய செய்திகள்

1. ‘‘அருண் ஜெட்லியுடனான பேரத்தால் விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதி’’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அருண் ஜெட்லி–விஜய் மல்லையா இடையே ஏற்பட்ட பேரத்தால், விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
2. ‘வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன்’ - விஜய் மல்லையா
ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
3. நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி
நாடாளுமன்றத்தில் நான் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார். என்னை சந்திக்க அவருக்கு நேரம் எதுவும் ஒதுக்கவில்லை என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
4. நாட்டைவிட்டு புறப்படும் முன் ஜெட்லியை சந்தித்தேன் - மல்லையா; களத்தில் குதித்தது காங்கிரஸ், ‘பொய்’ ஜெட்லி மறுப்பு
வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையா நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சரை சந்தித்தேன் என்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. #VijayMallya #ArunJaitley
5. ஆகஸ்ட் 3-வது வாரத்தில் அருண் ஜெட்லி தனது பணிகளை துவங்குவார் என தகவல்
ஆகஸ்ட் 3-வது வாரத்தில் அருண் ஜெட்லி நிதி அமைச்சராக தனது பணிகளை துவங்குவார் என தகவல்கள் கூறுகின்றன. #ArunJaitley