உலக செய்திகள்

மக்கள் கூட்டத்தில் கார் மோதல், கத்தி குத்து - கொடூர குற்றவாளி கைது + "||" + Car crowd at the crowd meeting, knife punch - arrested by a cruel criminal

மக்கள் கூட்டத்தில் கார் மோதல், கத்தி குத்து - கொடூர குற்றவாளி கைது

மக்கள் கூட்டத்தில் கார் மோதல், கத்தி குத்து - கொடூர குற்றவாளி கைது
சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச்செய்ததுடன் கத்தியால் குத்தி 3 பேரை கொன்ற கொடூர குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
பீஜீங்,

சீனா நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடிய இருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்து மோதியது. இதில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். அப்போது ஆத்திரம் தீராமல் காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தினார்.


இந்த கொடூர சம்பவத்தில் 3 பேர் அதே இடத்தில் இறந்தனர். 43 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்த போலீசார் அந்த நபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (வயது 54) என்றும், பல்வேறு குற்றவழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதல் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் பலி
மாமல்லபுரம் அருகே தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. கார் மோதியதால் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி - கோவை பட்டதாரி கைது
சேலத்தில் கார் மோதியதில் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார். இது தொடர்பாக கோவை பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
3. தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடைவீதியில் நேற்று பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
4. தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க திருச்சி கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
5. கூடுவாஞ்சேரியில் பஸ்-கார் மோதல்; 2 பேர் பலி
கூடுவாஞ்சேரியில் பஸ்-கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.