தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி + "||" + While walking in parliament, Vijay Mallya spoke to me - Arun Jaitley

நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி

நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி
நாடாளுமன்றத்தில் நான் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார். என்னை சந்திக்க அவருக்கு நேரம் எதுவும் ஒதுக்கவில்லை என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி,

விஜய் மல்லையா பேட்டி குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தீர்வுடன் என்னை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவர் கூறியது பொய். அது, உண்மையை பிரதிபலிக்கவில்லை.


கடந்த 2014-ம் ஆண்டு நான் மத்திய மந்திரி ஆனதில் இருந்து, என்னை சந்திக்க அவருக்கு நான் நேரம் ஒதுக்கியதே இல்லை. எனவே, அவர் என்னை சந்தித்தார் என்ற கேள்வியே எழவில்லை. அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். எப்போதாவது சபைக்கு வருவார்.

ஒருதடவை நான் நாடாளுமன்ற கூட்டத்தில் இருந்து வெளியே வந்து, எனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் என்ற தகுதியை தவறாக பயன்படுத்தி, என்னை நோக்கி வேகமாக வந்தார். “கடன் தீர்வுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்” என்று நடந்தபடியே கூறினார்.

அவர் முன்பே பலதடவை இதுபோல் ஏமாற்றி இருப்பதால், மேற்கொண்டு அந்த உரையாடலை வளர்க்க விரும்பாமல், நான் குறுக்கிட்டேன். “என்னிடம் பேசுவதில் அர்த்தம் இல்லை. வங்கிகளை அணுகுங்கள்” என்று அவரிடம் கூறினேன். அவரது கையில் வைத்திருந்த ஆவணங்களைக் கூட நான் வாங்கவில்லை.

மாநிலங்களவை உறுப்பினர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி அவர் மேற்கொண்ட இந்த ஒரு வார்த்தை பரிமாற்றத்தை தவிர, என்னை சந்திக்க அவருக்கு நான் அனுமதி அளித்தது இல்லை. அந்த கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு : ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி
நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே நடைபெற்ற ஓட்டெடுப்பில் ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவிப்பு
அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.
3. நாடாளுமன்ற விதிகளை பின்பற்றி விரைவில் வாக்கெடுப்பு நடத்த சிறிசேனாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்
இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.
4. இலங்கை நாடாளுமன்றம் கூடும் தேதியில் குழப்பம் ! 7 ஆம் தேதி கூட்டப்படலாம் என தகவல்
இலங்கை நாடாளுமன்றம், 5 ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது 7 -ஆம் தேதி கூட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
5. இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக சிறிசேனா அறிவிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக சிறிசேனா அறிவித்துள்ளார்.