தேசிய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் திண்டாட்டம் + "||" + Petrol price further goes up

மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
பெட்ரோல், டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எரிபொருள் விலை தினம்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
3. பெட்ரோல் விலை 17 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 80.56க்கு விற்பனையாகிறது.
4. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.