தேசிய செய்திகள்

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Arun Jaitley Lying, Congress MP Saw Him Meet Vijay Mallya": Rahul Gandhi

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறியதாவது: “லண்டன் செல்வதற்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை  பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியுள்ளார். தனது சந்திப்புகள் குறித்து அனைத்தையும் சமூகவலைதளத்தில் எழுதி வரும் அருண் ஜெட்லி, இந்த சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை. மல்லையாவுடன் ஒரு சில சொற்களே பேசியதாக ஜெட்லி சொல்வது பொய். 

தலைமறைவானவருடன் நிதியமைச்சர் பேசியுள்ளார். அவர் லண்டன் செல்ல போவதாக கூறியுள்ளார். இதனை ஏன், அருண் ஜெட்லி, சிபிஐ, அமலாக்கத்துறை, போலீசாரிடம் ஏன் கூறவில்லை. கைது அறிக்கை, தகவல் அறிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சிபிஐ.,யை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தான் செய்ய முடியும். மல்லையா நாட்டை விட்டு தப்பி செல்ல அருண் ஜெட்லி மறைமுகமாக உதவியுள்ளார். 

அருண் ஜெட்லியை விஜய்மல்லையா சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி, பி.எல் புனியா பார்த்துள்ளார். 15 முதல் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் அமர்ந்து பேசியுள்ளனர். ரபேல் மற்றும் மல்லையா விவகாரத்தில் அரசு பொய் சொல்கிறது. மல்லையா நாட்டை விட்டு வெளியேற நிதியமைச்சர் இலவச பாஸ் வழங்கியுள்ளார்” இவ்வாறு அவர் பேசினார். 


தொடர்புடைய செய்திகள்

1. உடல் நலம் தேறியது: அருண் ஜெட்லி மீண்டும் நிதி மந்திரியாக பொறுப்பேற்றார்
உடல் நலம் தேறியதை அடுத்து, அருண் ஜெட்லி மீண்டும் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2. நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்
நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.
3. தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
4. அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன்: ராகுல் காந்தி
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
5. ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பு- அருண் ஜெட்லி
ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...