மாநில செய்திகள்

2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி + "||" + Will win more seats than 2014 poll; Pon. Radhakrishnan

2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
பா.ஜ.க. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என பொன். ராதாகிருஷ்ணன் பேட்டியளித்து உள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், பா.ஜ.க. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.  வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியை பிடிக்கும் என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்பொழுது, சமூக வலை தளங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக நக்சலைட்டுகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.  பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பா.ஜ.க.வின் ஆலோசனையை கேட்கமாட்டார் என்றும் கூறினார்.

சாமானியனின் குரல் சர்க்காருக்கு தெரியவில்லை என நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.  இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வின் நாளிதழில் வெளியான விமர்சனம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு தூணுக்கு பின்னால் நின்று பேசுவதற்கு பதிலளிக்க முடியாது என கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் பேசியது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, பிரதமரை தேர்வு செய்யும் தகுதி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் கிடையாது என கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் தம்பிதுரை பேட்டி
‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் என தம்பிதுரை கூறினார்.
2. ‘கஜா’ புயலால் பாதிப்பு: தென்னை விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
3. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமையும் கனிமொழி எம்.பி. பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகவும் பலமான கூட்டணி அமையும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
4. மணல் கொள்ளையர்களுக்கு அமைச்சர்கள் துணையாக உள்ளனர் நல்லக்கண்ணு பேட்டி
மணல் கொள்ளையர்களுக்கு அமைச்சர்கள் துணையாக உள்ளனர் என்று நல்லக்கண்ணு கூறினார்.
5. இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.