தேசிய செய்திகள்

காஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம் + "||" + 3 armed militants entered his house, changed clothes, take biscuits and left

காஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்

காஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்
காஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜஜ்ஜார் கொத்லி வன பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கிராமவாசி ஒருவரது வீட்டிற்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்துள்ளனர்.

அதன்பின் அவர்கள் தங்களது உடைகளை மாற்றுவதற்கு வேறு உடைகளை தரும்படி கேட்டுள்ளனர்.  தொடர்ந்து உணவு தரும்படியும் கேட்டுள்ளனர்.  அவர்கள் உடை மாற்றி கொண்டு, பிஸ்கெட்களை சாப்பிட்டு விட்டு, தண்ணீர் குடித்து விட்டு அங்கிருந்து 9 மணியளவில் வெளியேறி உள்ளனர்.

அதற்குமுன் தங்களுக்கு வாகனம் ஒன்று வேண்டும் என கிராமவாசியிடம் கேட்டுள்ளனர்.  ஆனால் வாகனம் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.  வாகனம் கிடைக்க ஏற்பாடு செய்தால் பணம் தருகிறோம் என தீவிரவாதிகள் அவரிடம் கூறியுள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் சென்ற உடனேயே கிராமவாசியின் குடும்பத்தினர் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.

தீவிரவாதிகளின் ஊடுருவலை அடுத்து நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  அந்த பகுதியில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.  இந்த தேடுதல் வேட்டை இன்று 2வது நாளாக தொடர்ந்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் சோபியான் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2. தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு படை தாக்குதல்
தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
3. சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் தாக்குதல்; 35 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
அமெரிக்க ஆதரவு படைகள் சிரியாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4. கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை
காஷ்மீரில் கிராமவாசியின் வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை மற்றும் வாகனம் கேட்ட 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. எம்.எல்.ஏ. வருகை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கி பறிப்பு; தீவிரவாதிகள் ஓட்டம்
காஷ்மீரில் எம்.எல்.ஏ. வருகைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரிடம் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.