தேசிய செய்திகள்

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கியது காங்கிரஸ் கட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு + "||" + UPA gave sweet deal to Kingfisher Airlines to keep it afloat: BJP

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கியது காங்கிரஸ் கட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கியது காங்கிரஸ் கட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சி இனிப்பு ஒப்பந்தம் வழங்கியுள்ளது என பாரதீய ஜனதா கட்சி இன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா.

வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.

மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மல்லையா, ஜெனீவாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருந்ததால், நான் நாட்டை விட்டு வெளியேறினேன். வெளியேறும் முன்பு, நிதி மந்திரியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இது உண்மை என கூறினார்.

நான் அரசியல்வாதிகளின் கால்பந்து என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். அதைப்பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. எனது மனசாட்சி தெளிவாக உள்ளது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தன்னை முறைப்படி சந்திக்க விஜய் மல்லையாவுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று கூறினார்.
அதே சமயத்தில், லண்டன் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா, தான் அருண் ஜெட்லியை தற்செயலாகவே சந்தித்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அருண் ஜெட்லிக்கும், மல்லையாவுக்கும் இடையே தொடர்பு உள்ளது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறினார்.  இதற்காக ஜெட்லி பதவி விலக வேண்டும்.  இதுபற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு நிர்வாகி சாம்பிட் பத்ரா கடுமையாக சாடி பேசினார்.  அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, காங்கிரஸ் தலைவருக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது.

ராகுல், விஜய் மல்லையாவுக்கும் மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கும் பின்னணியாக இருந்துள்ளார்.  ராகுலின் மொத்த குடும்பமும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளது.  அவர்கள் இலவச அடிப்படையில் பயணம் செய்ததுடன் அந்த பயணம் வணிக வகுப்புக்கும் உயர்த்தப்பட்டது.

ராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் உண்மையில் மல்லையா மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவி செய்துள்ளனர் என கூறினார்.

அதற்கு சான்றாக வங்கிகளால் கடன்கள் வழங்கப்பட்ட ஆவணங்களையும் பத்ரா செய்தியாளர்களிடம் காட்டினார்.  இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு இடையேயான தொடர்ச்சியான கடித பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

இந்த கடிதங்கள், ஒரு சார்புடனும், பகுதியாகவும் மற்றும் அனைத்து விதிமுறைகளையும் புறந்தள்ளி வைத்து விட்டு அந்நிறுவனத்திற்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கியது என்பதனை வெளிப்படுத்தும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...