தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம் + "||" + 1 JeM terrorist killed, 8 security personnel injured in encounter in J&K's Reasi district

காஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம்

காஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி பலியாகி உள்ளான். டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் காயம் அடைந்தனர்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜஜ்ஜார் கொத்லி வன பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த பகுதியிலுள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டிற்குள் தீவிரவாதிகள் இரவு நேரத்தில் புகுந்து, மாற்றுவதற்கு வேறு உடைகளை தரும்படி கேட்டுள்ளதுடன், உணவு தரும்படியும் கேட்டுள்ளனர்.  தங்களுக்கு வாகனம் கிடைக்க ஏற்பாடு செய்தால் பணம் தருகிறோம் என்றும் அவரிடம் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.  இதுபற்றி கிராமவாசி போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளார்.

தீவிரவாதிகளின் ஊடுருவலை அடுத்து நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  அந்த பகுதியில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.  இதில் மத்திய ரிசர்வ் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் தீவிரவாதிகளை நெருங்கினர்.

இந்த வேட்டையில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர்.

இதில், தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.  இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி. மோகன் லால் உள்ளிட்ட 8 போலீசார் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 12 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மற்றும் போலீஸ் பயிற்சி மையம் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2. கணவர் மீது சந்தேகம்; தகனமேடையில் எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார்
உத்தர பிரதேசத்தில் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் தகனமேடையில் எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை போலீசார் வெளியே இழுத்து மீட்டனர்.
3. சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் துருக்கி ஆதரவு படையினர் 120 பேர் பலி
சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல் கொய்தா தீவிரவாத கிளை அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படையினர் 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. நாகையில் போலீசாருக்கு பயிற்சி முகாம் - டி.ஐ.ஜி. லோகநாதன் பங்கேற்பு
நாகையில் போலீசாருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கலந்து கொண்டார்.
5. கொள்ளையர்களை பிடிக்க ஆயுதங்களின்றி சென்று திரும்பிய 3 போலீசார் பணியிடை நீக்கம்
டெல்லியில் கொள்ளையர்களை பிடிக்க ஆயுதங்களின்றி சென்று திரும்பிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.