மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி முதல் அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன்; பொன். ராதாகிருஷ்ணன் + "||" + Discussed about Centre planning work with CM; Pon. Radhakrishnan

மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி முதல் அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன்; பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி முதல் அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன்; பொன். ராதாகிருஷ்ணன்
மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி முதல் அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல் அமைச்சர் பழனிசாமியை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து அவருக்கு விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகளை தெரிவித்தேன் என கூறினார்.

அவர் தொடர்ந்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றிய நீதிமன்ற உத்தரவையொட்டி ஆளுநர் பன்வாரிலால் ஆலோசித்து முடிவு செய்வார்.  அவர் பல்வேறு வகைகளில் ஆலோசிப்பது பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது என கூறினார்.

முதல் அமைச்சர் பழனிசாமியிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினேன்.  கன்னியாகுமரியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவின்போது, அந்த மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் என்றும் அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. மின்பழுதுகளை சரிசெய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதலாக 2 ஆயிரம் பணியாளர்கள் அமைச்சர் பேட்டி
மின்பழுதுகளை சரிசெய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 ஆயிரம் பணியாளர்கள் கூடுதலாக வர உள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
2. ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்
காரைக்காலில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படவேண்டும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
3. பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது
பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.
4. அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் நடந்த அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
5. மத்திய, மாநில அரசுகள் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பட்டியல் இன மக்கள் நடவடிக்கை குழு வலியுறுத்தி உள்ளது.