தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்டோபர் 3ந்தேதி ரஞ்சன் கோகாய் பதவியேற்பு + "||" + Justice Gogoi appointed new Chief Justice of India

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்டோபர் 3ந்தேதி ரஞ்சன் கோகாய் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்டோபர் 3ந்தேதி ரஞ்சன் கோகாய் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்டோபர் 3ந்தேதி ரஞ்சன் கோகாய் பதவியேற்கிறார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார்.  இவரது பதவி காலம் வருகிற அக்டோபர் 2ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதனை அடுத்து அவர் அன்று ஓய்வு பெறுகிறார்.  இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி அக்டோபர் 3ந்தேதி கோகாய் பதவியேற்கிறார்.  அவர் சுப்ரீம் கோர்ட்டின் 46வது தலைமை நீதிபதியாவார்.  இத்தகவலை சட்ட அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிபிப்லி தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அவரது பதவி காலம் வருகிற 2019ம் ஆண்டு நவம்பரில் முடிவடைகிறது.தொடர்புடைய செய்திகள்

1. முக்கிய வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
கோர்ட்டுகளில் நடைபெறும் முக்கிய வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
2. பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி
பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.
3. நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து
எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியுள்ளது.
4. 7 பேர் விடுதலை சம்பந்தமான தீர்மானத்தை கவர்னர் டெல்லிக்கு அனுப்பியது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது - கி.வீரமணி பேட்டி
7 பேர் விடுதலை சம்பந்தமான தீர்மானத்தை கவர்னர் டெல்லிக்கு அனுப்பியது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என்று ஈரோட்டில் கி.வீரமணி கூறினார்.
5. ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஆறுதல் தருகிறது - வைகோ பேட்டி
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஆறுதல் தருகிறது என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறினார்.