தேசிய செய்திகள்

வட இந்திய வானொலிகளில் ராஜேந்திர சோழன் வரலாறு இன்று ஒலிபரப்பு தருண் விஜய் எம்.பி. தகவல் + "||" + Rajendra Chola's history on North Indian radio today is broadcast

வட இந்திய வானொலிகளில் ராஜேந்திர சோழன் வரலாறு இன்று ஒலிபரப்பு தருண் விஜய் எம்.பி. தகவல்

வட இந்திய வானொலிகளில் ராஜேந்திர சோழன் வரலாறு இன்று ஒலிபரப்பு தருண் விஜய் எம்.பி. தகவல்
சோழ மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனை பற்றி வட இந்தியர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
புதுடெல்லி, 

சோழ மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனை பற்றி வட இந்தியர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக நேற்று அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் ஆகும். அவரது வரலாற்றை இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பொருட்டு வெள்ளிக்கிழமை(இன்று) இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும், சில எப்.எம்.களிலும் ராஜேந்திர சோழனின் வரலாறு வட இந்திய மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. மேலும், டெல்லியில் உள்ள ஒரு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்ட வேண்டும், டெல்லியில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும், அவரது வரலாற்றை இந்தியா முழுவதும் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளேன்’ என்று கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...