தேசிய செய்திகள்

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 17–ந்தேதி வாரணாசி செல்கிறார் + "||" + Prime Minister Modi goes to Varanasi on 17th

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 17–ந்தேதி வாரணாசி செல்கிறார்

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 17–ந்தேதி வாரணாசி செல்கிறார்
பிரதமர் மோடிக்கு வருகிற 17–ந்தேதி (திங்கட்கிழமை) 67 வயது முடிந்து 68–வது வயது பிறக்கிறது.
வாரணாசி, 

பிரதமர் மோடிக்கு வருகிற 17–ந்தேதி (திங்கட்கிழமை) 67 வயது முடிந்து 68–வது வயது பிறக்கிறது. இதையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாக 17–ந்தேதி அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார். அன்று அங்குள்ள பாரா லால்பூரில் 5 ஆயிரம் குழந்தைகளுடன் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். முன்னதாக அவர் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபடுவார் என்று தெரிகிறது.

மறுநாள் 18–ந்தேதி வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை காசி பிராந்திய பாரதீய ஜனதா தலைவர் மகேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா நேற்று தெரிவித்தார்.