மாநில செய்திகள்

அண்டை மாநிலங்களை போன்று பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் + "||" + GK Vasan urged the government to reduce the tax on petrol and diesel

அண்டை மாநிலங்களை போன்று பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அண்டை மாநிலங்களை போன்று பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
அண்டை மாநிலங்களை போன்று பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

அண்டை மாநிலங்களை போன்று பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அண்டை மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைத்து விலையை குறைத்துள்ளது. எனவே தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாளை(இன்று) காலை எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கிராமங்கள், குக்கிராமங்களில் மின்வெட்டு இருக்கிறது. ஆனால் மின்சார வாரியம் எங்கும் மின்வெட்டு இல்லை என மறுப்பது ஏன் என்று தெரியவில்லை?. சேலம்–சென்னை 8 வழி பசுமைசாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவது குறித்து மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தேர்தல் நேரத்தில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக திகழும். ஒத்த கருத்துகள் உடைய கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து அதிகாரபூர்வ கூட்டணி தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவருடன் த.மா.கா. கூட்டணி அமைக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘பொது வாழ்வில் அவருடைய(ரஜினிகாந்த்) நிலையை அதிகாரப்பூர்வமாக தெரிந்துக் கொண்ட பின்னர் தான் எந்த வார்த்தையும் கூற முடியும்.’ என்று ஜி.கே.வாசன் கூறினார்.

அமெரிக்காவில் நடைபெற உள்ள ‘சர்வதேச இளம் அரசியல் தலைவர்கள் பார்வை திட்டம்’ நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ், ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது த.மா.கா. துணை தலைவர் கோவை தங்கம், இளைஞரணி மாவட்ட தலைவர் கக்கன் உள்பட நிர்வாகிகள் யுவராஜூக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினர்.