மாநில செய்திகள்

மத்திய அரசு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் நடிகர் சரத்குமார் பேட்டி + "||" + Actor Sarath Kumar needs to think about the government

மத்திய அரசு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் நடிகர் சரத்குமார் பேட்டி

மத்திய அரசு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் நடிகர் சரத்குமார் பேட்டி
மக்களை பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டி உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அனைத்து இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜயகாந்த்துடன் கூட்டணி வைப்பீர்களா? என்று என்னிடம் கேட்டதற்கு காலத்தின் கட்டாயம் அதுவாக இருந்தால் தவறு இல்லை என்று கூறினேன். ஏற்கனவே விஜயகாந்த்துடன் கலையுலகத்திலும் நடிகர் சங்கத்திலும் பயணித்து இருக்கிறேன்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிய நேரில் சந்திக்க உள்ளேன். அப்போது அரசியல் எதுவும் பேசமாட்டேன். இந்தியாவிலேயே போலீஸ் டி.ஜி.பி. வீட்டில் சி.பி.ஐ. சோதனை என்பது முதன்முறையாக நடந்து உள்ளது. மத்திய அரசு அனைவரையும் அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தை இழிவுபடுத்துகின்ற செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஊழல் அதிகமாக நடப்பதாக உலகமே திரும்பி பார்க்கின்ற வகையில் ஏதோ சதி நடப்பதாக இந்த சம்பவங்களை பார்க்கிறேன். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் வருவாய் இழப்பு ஏற்படுகிறதா? அதிகமாகிறதா? என்பதை பார்க்க வேண்டும். வருவாய் இழப்பு ஏற்பட்டால் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை சிந்தித்து மக்களுக்காக செயல்பட வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதால் வரியை குறைக்க வேண்டும். மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு மற்றவர்களை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும், கருத்து சுதந்திரத்தை பறிக்க வேண்டும் என்று செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...