உலக செய்திகள்

அணுசக்தி வினியோக குழுவில் சேரும் விவகாரம்: ‘இந்தியா உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது’ அமெரிக்கா திட்டவட்டம் + "||" + India meets all qualifications to be member of NSG: US

அணுசக்தி வினியோக குழுவில் சேரும் விவகாரம்: ‘இந்தியா உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது’ அமெரிக்கா திட்டவட்டம்

அணுசக்தி வினியோக குழுவில் சேரும் விவகாரம்: ‘இந்தியா உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது’ அமெரிக்கா திட்டவட்டம்
உலக அளவில் அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அணுசக்தி வினியோக குழுவில் உறுப்பினராக வேண்டும்.
வாஷிங்டன், 

உலக அளவில் அணுசக்தி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அணுசக்தி வினியோக குழுவில் உறுப்பினராக வேண்டும். தற்போது அந்த குழுவில் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த குழுவில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஆனால் இந்தியா என்.பி.டி. என்று அழைக்கப்படுகிற அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு ஆகும். ஆனால் அந்த உடன்படிக்கையில் கையெழுத்து போட்டால்தான் அணுசக்தி வினியோக குழுவில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க முடியும் என்று சீனா கூறி, முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. இந்த நிலையில் அணுசக்தி வினியோக குழுவில் உறுப்பினராக சேருவதற்கான எல்லா தகுதிகளும் இந்தியாவுக்கு இருக்கிறது என்று அமெரிக்கா கூறி உள்ளது.

இதுபற்றி அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் கூறும்போது, “அணுசக்தி வினியோக குழு என்பது கருத்து ஒற்றுமை அடிப்படையிலான அமைப்பு ஆகும். சீனாவின் எதிர்ப்பால்தான் இதில் இந்தியா உறுப்பினர் ஆக முடியவில்லை. இதில் உறுப்பினராக சேர்வதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறும்போது, “சீனாவின் மறுப்பு ஓட்டுரிமை அடிப்படையில், இந்தியாவுக்கு அளிக்கக்கூடிய ஒத்துழைப்பை நாங்கள் குறைத்துக் கொள்ளப்போவதில்லை” என்றும் குறிப்பிட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...