தேசிய செய்திகள்

மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்: சிபிஐ சொல்கிறது + "||" + No foul play in change of LOC for Mallya, ‘detain’ order was issued by mistake: CBI

மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்: சிபிஐ சொல்கிறது

மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்: சிபிஐ சொல்கிறது
மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்து வருகிறார்.அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது ஒருபுறமிருக்க, அவரை வெளிநாட்டுக்கு தப்ப விட்டது தொடர்பாக மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எண்ணெய் ஊற்றுவது போல, விஜய் மல்லையா நேற்று முன்தினம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அதாவது, தான் வெளிநாடு தப்பிச் செல்லுமுன் மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவரிடம், வங்கிக்களுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் மல்லையா தெரிவித்தார். பின்னர், இது ஒரு தற்செயல் சந்திப்பு என மாற்றி பேசினார். விஜய் மல்லையாவின் கூற்றை அருண் ஜெட்லி திட்டவட்டமாக மறுத்தார். அதேவேளையில் அருண் ஜெட்லி பொய் கூறுவதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையாவுக்கு சலுகை காட்டப்பட்டு இருப்பதாகவும் அதற்கு காரணமான அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்றும் நேற்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து மேலும் பரபரப்பை ஏறபடுத்தியது. அதாவது, மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த வலுவன லுக் அவுட் நோட்டீஸ் எப்படி நீர்த்துப் போகச் செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்? அக்டோபர் 24, 2015-ல் தப்பிச் செல்வதை தடுக்கும் நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக மாறியது எப்படி? என்று கேள்வி எழுப்பி டுவிட் செய்து இருந்தார். 

இந்த நிலையில், மல்லையாவை கைது செய்ய வேண்டாம், அவரது நடமாட்டத்தை கண்காணித்தாலே போதும் என லுக் அவுட் சர்குலர்களில் திருத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுவது பற்றி சிபிஐ வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவர், அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்யுமாறு எந்த காவல் அமைப்பிடமும் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அது தவறான முடிவாக மாறிவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் - கண்டனம்
அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு அபராதம் விதித்து கடும் கண்டனத்தையும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.
2. பாராளுமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பாஜக ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம்
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ்-பாஜக இரண்டு கட்சிகளும் ‘குல்லிபாய்’ என்ற வீடியோவை வெளியிட்டு பிரசாரம் செய்து வருகின்றன.
3. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும்; பாரதீய ஜனதா
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோன்றியுள்ள சேற்றில் தாமரை மலரும் என பாரதீய ஜனதா தெரிவித்து உள்ளது.
4. பா.ஜனதாவுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு
பா.ஜனதாவுக்கு எதிராக விடிய, விடிய போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
5. சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...