தேசிய செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வு + "||" + Re strengthens by 50 paise against dollar in early trade

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வடைந்து 71.68 ஆக உள்ளது.
மும்பை,

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

டாலரின் தேவை கடுமையாக உயர்ந்ததால் அதன் மதிப்பும் அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், அதனை உடனடியாக கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு அண்மையில் கேட்டுக்கொண்டது. 

இதையடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகின்றன. இதன்பலனாக நேற்று வர்த்தக நேர முடிவில், 51 காசுகள் உயர்ந்து 72.18 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து 71.68 ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் ரூ.39 கோடி போதைப்பொருள் பறிமுதல் - வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் கைது
மும்பையில் ரூ.39 கோடி போதைப்பொருள் கடத்தியதாக, வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மும்பையில் மாடல் அழகி மான்சி கொலையில் புது திருப்பம்: பாலியலுக்கு மறுத்ததால் கொலை
மும்பையில் கொல்லப்பட்ட மாடல் அழகி பாலியல் உறவுக்கு மறுத்ததால் கொல்லப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
3. ‘மும்பை மாரத்தான்' போட்டியில் 46 ஆயிரம் பேர் ஓடினர்
மும்பையில் நேற்று நடந்த ‘மும்பை மாரத்தான்' போட்டியில் 46 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர்.
4. மும்பையில் ரூ.140 கோடியில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்
மும்பையில் கட்டப்பட்டுள்ள தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்
5. மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: வாசிம் ஜாபர் சதம் அடித்தார்
மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் தொடரில், விதர்பா அணியின் வாசிம் ஜாபர் சதம் அடித்தார்.