தேசிய செய்திகள்

காதலியை தாக்கிய போலீஸ்காரர் மகன் போலீசார் வழக்குப்பதிவு + "||" + Warning graphic content: Video of cop's son assaulting woman in Delhi goes viral; case registered

காதலியை தாக்கிய போலீஸ்காரர் மகன் போலீசார் வழக்குப்பதிவு

காதலியை தாக்கிய போலீஸ்காரர் மகன் போலீசார் வழக்குப்பதிவு
திருமணம் செய்து கொள்ள கூறிய காதலியை தாக்கிய போலீஸ்காரர் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
 புதுடெல்லி,

சமூக வலைதளத்தில் இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் தாக்கும் வீடியோ ஒன்று சில நாட்களாக வைரலாகி  உள்ளது. இதை தொடர்ந்து மேற்கு டெல்லி   போலீஸ் அவர் மீது ஒரு வழக்குபதிவு செய்து உள்ளனர்.  அவரது பெயர் ரோகித் சிங் தோமர் என கூறப்படுகிறது.  இது குறித்து டெல்லி போலீசார் கூறும் போது 354/506 ஐபிசி பிரிவின் கீழ் ஒரு வழக்கு ஏற்கனவே ரோஹித் தோமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய தொடர்ந்து  நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறி உள்ளனர்.

தோமர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக் சவுத்ரி என்பவரின் மகன் ஆவார்.  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய அவரது காதலியை அவர் தாக்கி உள்ளார். இது குறித்து அந்த பெண் புகார் அளித்து உள்ளார்.