உலக செய்திகள்

கேஸ் பைப்லைன் வெடித்து விபத்து ஒருவர் பலி 12 பேர் காயம் + "||" + One killed and 12 injured after 70 properties EXPLODE in flames across three Boston suburbs in unexplained gas main meltdown

கேஸ் பைப்லைன் வெடித்து விபத்து ஒருவர் பலி 12 பேர் காயம்

கேஸ் பைப்லைன் வெடித்து விபத்து ஒருவர் பலி 12 பேர் காயம்
அமெரிக்காவில் கேஸ் பைப்லைன் வெடித்ததில் 39 வீடுகளில் தீப்பிடித்தது, ஒருவர் பலியானார், 12 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் லாரன்ஸ்  நகரில் ஒரு தனியார் நிறுவனத்தின் கேஸ் பைப்லைன் வெடித்ததில் அந்த நிறுவனத்தின் கேஸ் இணைப்பை பயன்படுத்தும் 39 வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

தீயில் ஒரு வீடு வெடித்துச் சிதறியதில், அந்த வீட்டின் புகை போக்கி ஒரு கார் மீது போய் விழுந்தது. இதில் கார் நசுங்கியதில் அந்தக் காரில் இருந்த லியோனல் ரண்டன்  (18) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

50 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். லாரன்ஸ் நகரில் கேஸ் சப்ளை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.