தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் + "||" + TN Govt moves SC seeking review of its earlier order upholding NGT’s decision to constitute a committee

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.  மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதுதொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்று மாசு குறைந்துள்ளது பசுமை தீர்ப்பாயக்குழுவில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்
‘ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்று மாசு குறைந்துள்ளது’ என்று பசுமை தீர்ப்பாயக்குழுவிடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
2. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி 1½ லட்சம் மனுக்கள் பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி பிரதமர் அலுவலகத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
3. ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
4. தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்; கலெக்டரிடம் முத்துகிருஷ்ணாபுரம், ஜே.ஜே.நகர் பகுதி மக்கள் கோரிக்கை
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம், ஜே.ஜே.நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
5. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலை தேவையில்லை- கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலை தேவையில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.