தேசிய செய்திகள்

விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விவகாரம், சிபிஐக்கு காங்கிரஸ் கேள்வி + "||" + How can CBI now say that they had no proof of his fraud RS Surjewala

விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விவகாரம், சிபிஐக்கு காங்கிரஸ் கேள்வி

விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விவகாரம், சிபிஐக்கு காங்கிரஸ் கேள்வி
விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்ததில்லை என்று சிபிஐ இப்போது எப்படி கூறலாம் என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.
இங்கிலாந்து செல்லும் முன்னதாக அருண் ஜெட்லியை சந்தித்தேன் என விஜய் மல்லையா கூறிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜனதாவை இலக்காக்கி வரும் காங்கிரசுக்கு மாற்று ஆயுதமாக சிபிஐயின் அறிக்கை விவகாரம் சிக்கியுள்ளது. அதாவது லுக் அவுட் நோட்டீஸில் கைது செய்யுங்கள் என்பதை தகவல் தெரிவியுங்கள் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜய் மல்லையா வெளிநாடு தப்புவதில் பிரதமர் மோடிக்கு நேரடியாக தொடர்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், “விஜய் மல்லையா தவறிழைத்தவர் என்று எஸ்பிஐ 2014 ஆகஸ்ட் 19-ம் தேதியே நோட்டீஸ் விடுத்தது. 2014 செப்டம்பரில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் இதேபோன்ற அறிக்கையை தெரிவித்தது. 2015-ல் எஸ்எப்ஐஒ மற்றும் சிபிஐ அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இப்போது எப்படி சிபிஐ எங்களிடம் ஆதாரங்கள் இருந்ததில்லை என்று கூறமுடியும்?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.

 விஜய் மல்லையா வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிபிஐ, அமலாக்கப்பிரிவு அழுத்தம் காரணமாகவே மாயாவதி அஜித் ஜோகியுடன் கூட்டணி - காங்கிரஸ்
மாயாவதி மற்றும் அஜித் ஜோகியின் கூட்டணிக்கு பா.ஜனதாவின் ஆதரவு உள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.
2. காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, அழுகையை அண்டைய வீட்டாளர்கள் அலட்சியம் செய்துள்ளனர் - சிபிஐ
பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சிறுமிகளின் அழுகையை அண்டைய வீட்டாளர்கள் அலட்சியம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. மும்பையின் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
மராட்டியத்தின் 15-வது நிதி கமிஷனில் மும்பையின் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
4. விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்? காங்கிரஸ் அடுத்த கேள்வி
விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
5. விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு
விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் என்று மாயாவதி குற்றம்சாட்டினார்.