தேசிய செய்திகள்

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி + "||" + 17 Dead As Mini Bus Plunges Over 300 Feet In Jammu And Kashmir's Kishtwar

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி
காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கேஸ்வான் என்ற இடத்தில் இருந்து கிஸ்த்வார் என்ற இடத்திற்கு 27 பேருடன் மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செனாப் என்ற இடத்தில் 300 அடி  பள்ளத்தாக்கில்  மினி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் 6 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முன்னாள் முதல்-மந்திரி மெகாபூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.