உலக செய்திகள்

அமெரிக்காவை அச்சுறுத்திய ”புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது ” + "||" + Hurricane Florence Life-threatening storm lands in North Carolina

அமெரிக்காவை அச்சுறுத்திய ”புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது ”

அமெரிக்காவை அச்சுறுத்திய ”புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது ”
அமெரிக்காவை அச்சுறுத்திய புளோரன்ஸ் புயல் வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. 

இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கைப்பட்டதால், புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதையடுத்து 3 மாகாணங்களிலும் உள்ள கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள சிறைச்சாலைக் கைதிகள் 1000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

மேலும் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில் வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. சுமார் 100 கிமீ வேகத்தில் வீசிய இந்த புயலால், கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து, கரையோர பகுதிகளை தாக்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடானது. 

புயல் காரணமாக வடக்கு கரோலினாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சுமார் ஆயிரம் 2 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். 

இதனிடையே,  அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்பட்ட புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது.  12 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என கணிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல் வலுவிழந்தாலும் வடக்கு கரோலினா,ஜார்ஜியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளில் அறிவிக்கபட்ட அவசரநிலையை அரசு விலக்கிகொள்ளவில்லை.

புளோரன்ஸ் புயல் வலுவிழந்தாலும்,  முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள்  பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.