தேசிய செய்திகள்

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ஆயுஷ் அமைச்சக சார்பு செயலாளர் கைது + "||" + Rs 10 lakh bribe Federal AYUSH ministry prosecutor arrested

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ஆயுஷ் அமைச்சக சார்பு செயலாளர் கைது

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ஆயுஷ் அமைச்சக சார்பு செயலாளர் கைது
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ஆயுஷ் அமைச்சக சார்பு செயலாளர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகத்தில் சார்பு செயலாளராக பணியாற்றி வருபவர் ஆர்.கே.காத்ரி. அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார்.


மருந்து பொருட்கள் விற்பனை ஏஜெண்ட் ஒருவருக்கு அளிக்கவேண்டிய பணத்துக்கான ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும், அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கவும் அவரிடம் ஆர்.கே.காத்ரி லஞ்சமாக ரூ.10 லட்சம் கேட்டார்.

இதுபற்றி சி.பி.ஐ.யிடம் அந்த ஏஜெண்டு புகார் செய்தார். சி.பி.ஐ. வகுத்த திட்டப்படி, ஆர்.கே.காத்ரியிடம் ஏஜெண்டு பணம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட ஆர்.கே.காத்ரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.