மாநில செய்திகள்

அதிமுக அமைப்புச் செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமனம் + "||" + As the Organization Secretary Minister of Health CV Vijayabaskar Appointment

அதிமுக அமைப்புச் செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமனம்
அதிமுக அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று இரண்டாவது நாளாக தலைமை கழகத்தில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினர்.

இதில் மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், 

அதிமுக அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம். 

* மேலும் அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் நியமனம் - அதிமுக தலைமை.  தற்போது அருகில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ளதால் முத்துராமலிங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 

* அதிமுக சட்ட ஆலோசகராக பி.எச் பாண்டியன் நியமனம்.

* அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக முன்னாள் எம்.பி., காஞ்சி பன்னீர்செல்வம் நியமனம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...