தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு: ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்ப முயற்சி - காங்கிரஸ் புகார் + "||" + Welfare of the Supreme Court: Rafael trying to divert the scandal - Congress complained

சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு: ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்ப முயற்சி - காங்கிரஸ் புகார்

சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு: ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்ப முயற்சி - காங்கிரஸ் புகார்
ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்பும் முயற்சியாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தெஹ்சீன் பூனாவாலா என்பவர், ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு பிரச்சினையில் அந்த விமானத்தின் மறுபரிசீலனை செய்யப்பட்ட விலையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.


இதுபற்றி கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘‘ரபேல் முறைகேடு தொடர்பாக பா.ஜனதா ஆதரவுடன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நாங்கள் நிராகரிக்கிறோம். இது ரபேல் முறைகேடு தொடர்பான பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவரும் விசாரணையை தடுக்கவும், திசைதிருப்பவும் எடுக்கப்பட்ட முயற்சி. நாங்கள் இந்த வி‌ஷயத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார்.