மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. ஆர்ப்பாட்டம் + "||" + Petroleum and Natural Gas Corporation Demonstration

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணை தலைவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூசாக்கோ, சைதை மனோகரன், பாலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:–

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தாலே அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்தலாம். மத்திய அரசு வரியை குறைத்தால்போதும் அல்லது தமிழக அரசு மற்ற மாநில அரசுகளை போன்று மதிப்பு கூட்டு வரியை குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும். அதை விடுத்து தமிழக மக்களை மத்திய, மாநில அரசுகள் ஊதாசீனப்படுத்தி வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே போனால் வரும் மாதங்களில் 100 ரூபாயை தாண்டும் அபாயம் வந்துவிடும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன். இந்த விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் காரணங்கள் கூறுவதை விட்டுவிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இந்த போராட்டம் அடித்தளமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம் ! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.